வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்: ஆசிட் வீசி பழிதீர்த்த இளம்பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
மூன்று ஆண்டுகளாக காதலித்த காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளம்பெண் தனது காதலர் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்ற மளிகை கடை வைத்திருக்கும் நபர் அதே ஊரைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நாகேந்திராவின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு லட்சுமி என்ற பெண்ணை பார்த்து சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர்
தனது காதலன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஆத்திரத்தில் இருந்த சுப்ரியா, சமீபத்தில் நாகேந்திரா சாலையில் நடந்து சென்றபோது அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் அவருக்கு முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது சுப்ரியாவுக்கு தெரியும் என்றும் அவர் பணம் வாங்கிக் கொண்டு தான் தனது காதலை விட்டுக் கொடுத்தார் என்றும் நாகேந்திரன் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தன் மீதும் ஒரு முறை சுப்ரியா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இது இரண்டாவது தாக்குதல் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments