ஒருதலைக்காதல்...! கொலையுண்ட இளைஞர் மற்றும் இளம்பெண்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம், சித்தூரில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தான் சுஷ்மிதா.இவர் கண்டிரிகை கிராமம், கொண்டாரெட்டி நகரைச் சேர்ந்தவர். இதே கிராமத்தில் உள்ள சின்னா என்ற 24 வயது இளைஞன், சுஷ்மிதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அப்பெண்ணிடமும் பலமுறை கூறி, காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தவும் செய்துள்ளான். வேலையில்லாமல் சுற்றத்திரிந்த சின்னாவை, இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. இதனால் காதலை மறுத்தும், அவனை ஆத்திரத்தில் திட்டியுள்ளார் இளம்பெண். ஆனால் சின்னவோ காதலை மறுத்த நர்ஸை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த பொதுமக்கள் சின்னாவை சரமாரியாக அடித்தும், கற்களால் தாக்கியும் உள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, சித்தூர் காவல் துறையினர் 2 உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரண்டு கொலைகள் தொடர்பாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com