தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆந்திராவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10,093 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,390 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1213ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

விடுமுறை எடுத்து பொறியியல் படிக்கலாம், M.Phil படிப்பு இனி கிடையாது: புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போதைக்கு திருமணம் வேண்டாம்: அதிர்ச்சியில் இருந்து மீண்ட தமிழ் நடிகை பேட்டி

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பூர்ணா.

இந்திய மண்ணில் தரையிறங்கிய ரஃபேல் ரக விமானங்கள்!!! இதன் சிறப்பம்சம் என்னென்ன???

இந்தியா பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பான ரஃபேல் ரக விமானங்களுக்கான ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப் பட்டது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதால் நிம்மதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 6000க்கும் அதிகமாக இருந்தாலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட பாதிப்பு எண்ணிக்கையை

புவி அறிவியல் துறைக்கான தேசிய விருது: சென்னை தேசியப் பெருங்கடல் இயக்குநர் சாதனை!!!

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.