ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டை பெற்ற பேபிக்கு அடித்த அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Friday,November 16 2018]

ஆந்திர் மாநிலத்தை சேர்ந்த பேபி என்ற பெண், ரஹ்மான் இசையில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த 'காதலன்' படத்தில் இடம்பெற்ற 'என்னவளே' என்ற பாடலின் தெலுங்கு பதிப்பை பாடிய வீடியோ நேற்று இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.

இந்த வீடியோவை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து 'இனிமையான குரல்' என்று பாராட்டினர். ஏ.ஆர்.ரஹ்மான் பாராடியதால் இந்த வீடியோவை ஒருசில மணி நேரங்களில் 12 லட்சம் பார்வையாளர்கள் பார்த்தனர். மேலும் ஒருசிலர் இந்த பெண்ணுக்கு உங்கள் இசையில் பாட வாய்ப்பு தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ரஹ்மானிடம் பாராட்டு பெற்ற பேபிக்கு பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளர் கோடேஸ்வரராவ். ரஹ்மானும் விரைவில் பேபிக்கு வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவர் 'விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற 'உன்னைக் காணாத...' பாடலைப் பாடி ஷங்கர் மகாதேவனின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.