2 மரங்களை 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அம்பானி… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

இந்தியத் தொழில்துறையில் கொடிக்கட்டி பறந்துவரும் முகேஷ் அம்பானி 180 ஆண்டு பழமையான 2 ஆலிவ் மரங்களை கிட்டத்தட்ட 85 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்த மரங்கள் தற்போது ஆந்திராவில் இருந்து ஜாம்நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

முகேஷ் அம்பானி, குஜராத் நகரில் உள்ள ஜாம்நகரில் ஒரு மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வருகிறார். இதற்காக அமைக்கப்படும் பூங்காவிற்க அரியவகை மரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால் ஆந்திரா அருகே கடியத் பகுதியில் இயங்கிவரும் கவுதமி எனும் நர்சரி கார்டனில் 2 ஆலிவ் மரங்களை அவர் ஆர்டர் செய்துள்ளதாகவும் 180 பழமையான இந்த மரங்கள் தற்போது ஆந்திராவில் இருந்து ஜாம்நகரில் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தலா 2 டன் எடைக்கொண்ட ஆலிவ் மரங்கள் தற்போது கனமான டிரக்கில் வைத்து எடுத்துக் செல்லப்படுகின்றன. இந்த மரங்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தற்போது ஜாம்நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பராமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் செழுமையைக் கொண்டுவரும் என நம்பப்படும் இந்த மரம் கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகள் வாழக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.