அவெஞ்சர் படம் பார்த்து மாரடைப்பால் மரணம் அடைந்த இந்திய ரசிகர்

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக சமீபத்தில் உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. உலக அளவில் இந்த படத்தின் வசூல் ரூ.5000 கோடியை தாண்டிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் அவென்சர்ஸ் திரைப்படம் 3டியில் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில் ஒருவர் மட்டும் 3டி கண்ணாடியை அணிந்தபடியே இருக்கையில் உட்கார்ந்திருந்தார். திரையரங்க ஊழியர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் கண்விழித்தபடியே மரணம் அடைந்துள்ளது தெரியவந்தது. பின்னர் போலீசார் வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.,

More News

மொபைல் போனால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி

மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மாணவி ஒருவரை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

உலக லெவன் டி-20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் வீசிய இரண்டு கடுமையான புயல்கள் காரணமாக அந்நாட்டின் ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதம் அடைந்தன

நடிகை அமலாபாலின் புதிய  வைரல் வீடியோ

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.

நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் தமிழக  மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகர் கைது குறித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.