குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அனைத்து நாட்டு அரசாங்கங்களும், காவல்துறையினரும், மருத்துவர்களும், நர்சுகளும், மருத்துவ ஊழியர்களும், துப்புரவு தொழிலாளிகளும் சுகாதாரத்துறை உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் இரவு பகல் பாராமல் பணி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீஜனா என்பவர் விசாகப்பட்டினம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆறு மாதம் பிரசவ விடுமுறை இருந்தபோதிலும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பிவிட்டார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பணிகள் இருக்கும் நிலையில் தான் விடுமுறையில் வீட்டில் இருக்க விரும்பவில்லை என்பதால் பணியை தொடர முடிவு எடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஒரு மாத கைக்குழந்தையை ஒரு கையிலும் இன்னொரு கையில் போன், லேப்டாப் என அவர் பிசியாக பணி செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இவர் போன்ற அதிகாரிகள் தன்னலம் கருதாது பொது மக்களுக்காக சேவை செய்வதை பொதுமக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் ஒர் மாதமே ஆகும் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி அறிவுரையும் கூறி வருகின்றனர்.

More News

கொரோனா எதிரொலி; எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு!!!

கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முறைப்படுத்தும் நோக்கில் 1960 களில் உருவாக்கப்பட்ட ஒபேக் கூட்டமைப்பில் இதுவரை 14 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.

கொரோனா நிலைமை மோசமாவதற்கு அரசியல் அமைப்புகளின் துரோகம்தான் காரணம்!!! நோம் சாம்ஸ்கி குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவின் தத்துவவியல் நிபுணரும், மொழியியல் அறிஞருமான நோம் சாம்ஸ்கி இந்த உலகம் கொரோனாவை கையாண்ட விதம் தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது

கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!

சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் தோன்றி, அந்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் தற்போது பரவியுள்ளது.

எனக்கே சாராயம் இல்லைன்னா எவனும் குடிக்க கூடாது: பிரபல விஜேவின் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித திரைப்பட படப்பிடிப்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்

இன்று முதல் அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு: அதிரடி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் இன்று முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது