சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர்: தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் சமீபத்தில் பரவியதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
அவருக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவரின் மனைவி, டிரைவர் மற்றும் அவருடைய குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நெல்லூரில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திர மருத்துவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவரை அந்த பகுதியில் தகனம் செய்ய அம்பத்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments