அட்லியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தை இயக்கிய அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இது குறித்த ஆரம்பகட்ட பணிகளை அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அட்லியின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாகி வந்தது என்பதும் ’அந்தகாரம்’ என்ற டைட்டிலில் உருவாகி வந்த அந்த படத்தை விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அர்ஜுன் தாஸ், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ‘அந்தகாரம்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

More News

'கமல்ஹாசன் 232' போட்டோஷூட்: நவம்பர் 7ல் விருந்து கிடைக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் 232ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆஜித், ஷிவானியே கலாய்ச்சிட்டாங்களே! அனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியவிருக்கும் நிலையில் ஷிவானி கூட ஓரளவுக்கு பேச ஆரம்பித்துவிட்டார். பேச ஆரம்பித்து விட்டார் என்று சொல்வதைவிட ரொமான்ஸ்

முடிவுக்கு வந்தது சிம்புவின் அடுத்த படம்: ரிலீஸ் எப்போது?

நடிகர் சிம்பு கடந்த சில வாரங்களாக கேரளாவில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம் ஆக்கி உள்ளார் என்பதும் அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் கடந்த பத்து

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!!

மருத்துவப் படிப்பில் சேர தமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 7.5% உள்இட

19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி?

கடந்த இரண்டு நாட்களாக சூர்யகுமார் யாதவ் குறித்த செய்திகள்தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.