'அண்டாவ காணோம்'  திரைப்பட ரிலீஸ் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'அண்டாவ காணோம்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில வருடங்கள் ஆனபோதிலும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகவில்லை.

இந்த நிலையில் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு வரும் 28ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் குறித்து முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் சற்றுமுன் பிறப்பித்துள்ளது.

ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் ஒருசில காரணங்களால் ஆகஸ்ட் 28ஆம் தேதி ரிலீசாக வேண்டிய ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.