குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை அவமதிக்கப்பட்டாரா? அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை உள்ளனர் என்பது தெரிந்தது. கடந்த சில சீசன்களாக ரக்சன் மட்டுமே தொகுப்பாளராக இருந்த நிலையில் இந்த சீசனில் மணிமேகலை தொகுப்பாளினியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதும் கடந்த நான்கு சீசன்களிலும் அவர் கோமாளியாக இருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த வார எபிசோடின் முன்னோட்ட வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அதில் மணிமேகலை மீண்டும் கோமாளியாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு இணங்க மீண்டும் மணிமேகலை கோமாளி ஆகிறார் என்று செஃப் தாமு கூறிய நிலையில் மணிமேகலை அதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் காட்சிகளும், புகழ் உட்பட சக கோமாளிகள் அவரை கிண்டல் செய்யும் காட்சிகளும் அந்த முன்னோட்ட வீடியோவில் உள்ளன.
தன்னுடன் கோமாளியாக இருந்த ஷிவாங்கி எல்லாம் குக் ஆகிவிட்ட நிலையில் தான் கோமாளியாகவே இருப்பதை விரும்பாமல் மணிமேகலை கடந்த சீசனில் பாதியிலேயே திடீரென விலகினார், அதன் பிறகு அவரை தொகுப்பாளினியாக கடைசி சில எபிசோடுகள் மட்டும் விஜய் டிவி அழைத்து வந்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த சீசனின் ஆரம்பத்தில் இருந்தே தொகுப்பாளினியாக மணிமேகலை செயல்பட்டு வந்த நிலையில் திடீரென அவரை கோமாளி ஆக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விஜய் டிவி தன்னை அவமதித்து விட்டது என்று நினைத்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவாரா? அல்லது தொகுப்பாளினியை விட கோமாளியில் தான் நல்ல ஸ்கோர் செய்ய முடியும் என்று நினைத்து இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Anchor மீண்டும் Comali ஆக்கப்பட்டார்..😂
— Vijay Television (@vijaytelevision) June 1, 2024
#CookuWithComali5 Stress எல்லாம் பறந்துfy..😃 #CookuWithComali5 - சனி & ஞாயிறு இரவு 9.30 மணிக்கு..நம்ம விஜய் டிவில.. #CookuWithComali5 #CWC5 #CookuWithComaliSeason5 #VijayTelevision #VijayTV pic.twitter.com/iF8gHMuJlO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com