நிருபரிடம் சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமிக்கு அன்புமணி ஆதரவா?

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

சென்னையில் நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணாமி செய்தியாளர்களை சந்தித்தபோது நிருபர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணசாமியிடம் கேள்வி கேட்ட ஒரு நிருபரிடம் உன் ஊர் எது? நீ என்ன ஜாதி? என்று கேட்டார். இதற்கு நிருபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து வீடியோவும் இணையத்தில் வைரலாகி கிருஷ்ணசாமி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமகவின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்ம் 'கிருஷ்ணசாமி சாதியின் பெயரை கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'தமிழகத்தில் ஊடகங்கள் திமுகவுக்கு துணை போவதாகவும், ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் கிருஷ்ணசாமி அப்படி கேட்டிருப்பார் என்றும் கூறினார்.

சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமியை அரசியல் தலைவர்கள் பலர் கண்டித்து வரும் நிலையில் அன்புமணி, அவருக்கு ஆதரவாக பேசியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது