கமல் எல்.கே.ஜி, ரஜினி பேபி கிளாஸ்: அன்புமணி விமர்சனம்
- IndiaGlitz, [Thursday,July 05 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப கோலிவுட் திரையுலகில் இருந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே நேரத்தில் தனித்தனியாக அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலை ஆளும் கட்சியான அதிமுக உள்பட கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே விமர்சனம் செய்து வருகின்றன. இருவரையும் விமர்சனம் செய்யாத அரசியல் தலைவர்களே இல்லை என்றும் கூறலாம்
இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி, கமல், ரஜினியின் அரசியல் குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'அரசியலைப் பொறுத்தவரையில், கமல்ஹாசன் இன்னும் எல்.கே.ஜி லெவலில்தான் இருப்பதாகவும். ரஜினிகாந்த், பேபி கிளாஸில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மக்கள் பிரச்னைக்காகப் போராடுவதுதான் அரசியல் என்பதை இன்னும் புரிந்துகொள்ளாமல் நடிகர்கள் இன்னும் ஷூட்டிங் ஸ்பாட், இயக்குநர், நடிகர் - நடிகை, என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிப்பதாகவும், இவர்களுக்கு மக்கள் பிரச்னைகள் பற்றி என்ன தெரியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.