30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி மனைவி செளம்யாவின் சகோதரரும் காங்கிரஸ் பிரமுகருமான விஷ்ணுபிரசாத் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த விமர்சனம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி கூறியபோது, 'விஷ்ணுபிரசாத் அவர்களை எனக்கு 30 ஆண்டுகாலம் தெரியும். என்னுடன் கல்லூரியில் படித்தவர், எனக்கு 28 ஆண்டுகளாக மைத்துனராக உள்ளார். என்னுடைய மூன்று மகள்களுக்கும் அவர் மடியில் வைத்து தான் மொட்டை எடுத்தோம், காதணி விழா நடத்தினோம்.

ஆனால் தற்போது அவர் எங்களை விமர்சனம் செய்திருப்பதை நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. என்னுடைய 30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டது. இதனால் என்னை விட என்னுடைய மனைவி மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளார்' என்று அன்புமணி தெரிவித்தார்.