close
Choose your channels

சிம்புவின் சவாலுக்கு அன்புமணியின் ரியாக்சன் என்ன தெரியுமா?

Wednesday, July 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் சவாலுக்கு அன்புமணியின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்று இருந்ததால் அதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து நேற்று வெளியிட்ட வீடியோவில் கருத்து கூறிய நடிகர் சிம்பு, இதுகுறித்து விவாதிக்க அன்புமணி அவர்கள் தயார் என்றாலும் தானும் தயார் என்று கூறினார்.

இந்த நிலையில் சிம்புவுடன் விவாதம் செய்ய தயாரா? என செய்தியாளர்கள் இன்று அன்புமணி அவர்களிடம் கேட்டபோது அதற்கு, 'சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இதுகுறித்த கூட்டம் ஒன்றை நடிகர் சங்கம் கூட்டினால் அங்கு விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சர்கார் பட விவகாரத்தில் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு கூறியதாகவும் அன்புமணி மேலும் தெரிவித்தார்.

அன்புமணி கூறியபடி இதுகுறித்த விவாதத்திற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment