'சர்கார்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி கண்டனம்

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'சர்கார்' என்று சற்றுமுன் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஸ்டைலான போஸ் ஆகியவற்றை பெரும்பாலான கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு தனது  கண்டனத்தை தெரிவித்துள்ளார். 'சர்கார்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய்யின் ஸ்டைல், சிகரெட் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஒரு டுவீட்டில் கூறியுள்ளார். 

மேலும் இன்னொரு டுவீட்டில் புகைபிடிக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அன்புமணியின் இந்த டுவிட்டுக்கு வழக்கம்போல் நேர்மறை மற்றும் எதிர்மறை கமெண்ட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.