பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து பேசினால் போதாது: விஜய்க்கு அட்வைஸ் கூறிய அன்புமணி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து பேசினால் மட்டும் போதாது என்று என்றும் அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அட்வைஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் தளபதி விஜய் கல்வி விழா நடத்தினார் என்பது அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10,12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார் என்பதையும் பார்த்தோம்
இந்த விழாவில் விஜய் பேசிய போது ’பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர்கள் குறித்து படிக்க வேண்டும் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யின் பேச்சு குறித்து கூறியபோது, ‘தந்தை பெரியாரைப் பற்றியோ, அம்பேத்கரை பற்றியோ, கர்மவீரர் காமராஜரை பற்றியோ பேசினால் மட்டும் போதாது அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout