அசோக்குமார் தற்கொலை வழக்கில் இருவர் அதிரடி கைது: 

  • IndiaGlitz, [Wednesday,November 29 2017]

சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு தற்கொலைக்கு அன்புச்செழியனே காரணம் என்று அசோக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தலைமறைவாகியுள்ள அன்புச்செழியனை பிடிக்க 3 தனிப்படைகள் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அன்புச்செழியனின் மேனேஜர்கள் முருகன் மற்றும் சாதிக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் அன்புச்செழியன் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்துள்ளதாகவும் மிக விரைவில் அன்புச்செழியன் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்புச்செழியனின் மேனேஜர்களில் ஒருவரான முருகன், அசோக்குமாரை மிரட்டியது உண்மைதான் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.