முன் ஜாமீன் மனுவை திடீரென வாபஸ் பெற்ற அன்புச்செழியன்

  • IndiaGlitz, [Thursday,November 30 2017]


சசிகுமார் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என்று போலீசாரால் தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியன் நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம் இல்லை என்றும் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறும், இந்த வழக்கில் அனைத்துவித ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் அன்புச்செழியனின் முன் ஜாமீன் மனு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. அன்புச்செழியன் மீது போலீசார் கந்துவட்டி வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மனுவை அன்புச்செழியனின் வழக்கறிஞர்கள் வாபஸ் பெற்றுள்ளது திரையுலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும்  முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் கட்சி அதிமுகவாகத்தான் இருந்தது

கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழரா? முதல்வரின் சர்ச்சை பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் பேசுவது பெரும்பாலும் உளறல்களாக இருப்பதை பொதுமக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

குமரி அருகே ஓகி புயல்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாகவும், இந்த புயல் குமரி கடலோர பகுதி வழியாக மேற்கு நோக்கி நகரும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடலோர பகுதியில்

கொள்ளை அடிப்பவரை தாக்க தயார். டுவிட்டரில் கமல் ஆவேசம்

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது டுவிட்டரில் சமூக அக்கறையுடன் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகிறார். அவரது கருத்து பெரும்பாலும் ஆளும் அரசின் ஊழல்களை குறித்தே இருப்பதால் பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.

மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு: மீண்டும் ஒரு சர்ச்சை அறிவிப்பு

'பத்மாவதி; திரைப்பட பிரச்சனை கடந்த சில வாரங்களாக கொழுந்துவிட்டு எரிது கொண்டிருக்கும் நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் ஒருசில அமைப்பை சேர்ந்தவர்கள்