செம லவ் ஸ்டோரி: 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிஎஸ் மித்ரன் தங்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். ’கொஞ்சம் பேசினால் என்ன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகனாக வினோத் கிஷானும், நாயகியாக கீர்த்தி பாண்டியனும் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யூடியூப் பிரபலங்களான ஆஷிக் மற்றும் செபாஸ்டின் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

ஹரி தஃபூசியா என்பவர் இசையமைக்கும் இந்த படத்தை கிரி முர்ஃபி இயக்கயுள்ளார். இந்த படத்தின் கதை, பள்ளிக்கால தோழர்கள் இருவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்திக்கும் போது ஏற்படும் காதல் என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியாக வித்தியாசமான செம லவ் ஸ்டோரி ஆக இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர்' வசூலை நெருங்கும் 'கேஜிஎஃப் 2'

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வசூலை 'கேஜிஎப் 2'  திரைப்படம்

1970களில் இருந்த அண்ணா சாலை: விஷால் படத்திற்காக போடப்படும் செட்!

கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்த அமைப்பில் விஷால் படத்திற்காக செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'அரபிக்குத்து' பாடலுக்கு மாஸ் நடனமாடிய பேட்மிண்டன் வீராங்கனை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

உலக நாயகனின் 'விக்ரம்' படம் குறித்த மாஸ் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்சமா பொண்ணை பார்த்தவுடன் பஞ்சர் ஆனேன்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' சிங்கிள் ரிலீஸ்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும்