பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிம்பு..

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

சகலகலா வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான சிம்பு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குழந்தை நட்சத்திரமாக தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் நடித்த சிம்பு, ஹீரோவாகவும் தந்தை இயக்கிய 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கோலிவுட் திரையுலகில் பல வெற்றி தோல்விகளை சந்தித்து இன்று இளையதலைமுறை முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

ஹரி இயக்கிய 'கோவில்', சிம்பு நடித்த இயக்கிய 'வல்லவன்', கெளதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயோ', பாண்டிராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு', ஆகிய படங்கள் சிம்புவுக்கு பெருமை சேர்த்த படங்கள்

நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் சிம்பு தற்போது சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

பீப் பாடல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கினாலும், சமூக அக்கறையும், மனதில் தோன்றியதை தைரியமாக வெளியே சொல்லும் குணமும் உடையவர். சமீபத்தில் நடந்த மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு திரையுலகில் இருந்து முதல் ஆதரவுக்குரல் கொடுத்தவர் சிம்பு. திரையுலகிலும் இசையுலகிலும் இன்னும் பல சேவைகள் செய்து கோலிவுட்டில் மென்மேலும் உயர சிம்புவுக்கு இந்த பிறந்த நாளில் எங்களது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறோம்

More News

மீண்டும் ஒருமுறை கடற்கரையில் கூடிய இளைஞர்கள் கூட்டம்

சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்களின் கூட்டம் தமிழினத்தின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை பீட்டா என்ற கொடிய அமைப்பிடம் இருந்து மீட்டு தந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் வெற்றி காரணமாக இனி எந்த பிரச்சனைக்கும் மாணவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் தோன்றியது...

படித்து கொண்டே விபச்சாரம் செய்த கல்லூரி மாணவி படுகொலை

உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் படித்து கொண்டே விபச்சாரம் செய்த நிலையில் பேரம் படியாததால் வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்...

விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை வரை கெடு

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், சங்கத்தின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினார். ஆனால் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்...

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு. மாறன் சகோதரர்களுக்கு அளிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது...

6 விக்கெட்டுக்கள் எடுத்த சஹலை தோனி திட்டியது ஏன்?

இந்தியா, மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மும்பையில் மோதிய 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா கொடுத்த 203 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து எட்டிவிடும் என்றுதான் முதல் பத்து ஓவர்களை பார்த்தவர்கள் ஊகித்திருப்பார்கள்....