கேரள வெள்ளம்: நடிகை அனன்யாவுக்கு தஞ்சம் கொடுத்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் பேய்மழையால் நூற்றுக்கணக்கானோர் பலியானது மட்டுமின்றி பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இம்மாநிலம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல திரையுலக பிரபலங்கள் பாதுகாப்பாக உள்ள சக நட்சத்திரங்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில் 'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை அனன்யா தற்போது பிரபல நடிகை ஆஷா சரத் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளாராம். ஆஷா சரத், கமல்ஹாசனின் 'பாபநாசம்' படம் உள்பட பல படங்களில் நடித்தவர்
மேலும் இந்த வெள்ளம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை நடிகை அனன்யா வெளியிட்டுள்ளார். அதில் 'எங்கள் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. நாங்கள் இப்போது பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா ஷரத்தின் வீட்டில் தான் இருக்கின்றோம். எங்கள் உறவினர்களின் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதை சற்றுமுன் தான் அறிந்தோம். கேரளாவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றே தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் அனைவரையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். எங்களைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments