நரி, விஷ பாட்டில், மிக்சர் , கிரிஞ்ச் யார் யார்? உள்ளே வந்தவுடன் அனன்யா கொடுத்த பட்டங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

பிக் பாஸ் வீட்டிற்கு எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வர இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விஜய் வர்மா வந்தார் என்பதும், அவர் ஒவ்வொரு போட்டியாளரின் வீக் பாயிண்டுகளை கூறி அவர்களுடைய புகைப்படங்களை சுத்தியலால் உடைத்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் வர்மாவை அடுத்து, பிக்பாஸ் வீட்டிற்கு அனன்யா உள்ளே வந்துள்ளார். அவர் உள்ளே வந்தவுடன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சில பட்டங்களை வழங்குகிறார். அதில் முதலாவதாக நரி என்ற பட்டத்தை விசித்ராவுக்கு கொடுக்கிறார். அவர் பாசத்தை காட்டி மோசம் செய்வதாக அனன்யா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக மாயாவுக்கு விஷ பாட்டில் என்றும் அவர்தான் இந்த சீசனின் உண்மையான விஷ பாட்டில் என்றும் கூறுகிறார். மேலும் விஷ பாட்டிலுக்கு ஆதரவாக இருக்கும் தவளை என்று பூர்ணிமாவை அனன்யா கூறுகிறார்.

இதனை அடுத்து கிரிஞ்ச் என்று நிக்சனை குறிப்பிட்ட அவர், நீ ஐஷுவை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினாய், ஆனால் உன்னை முதலில் நீ பார்த்துக்கொள் என்று அவர் அட்வைஸ் வருகிறார். கொசு தொல்லை என்று கூல் சுரேஷ்க்கு பட்டம் அளித்த அனன்யா அடுத்ததாக ஓவர் அட்வைஸ் என்ற பட்டத்தை மணிக்கு கொடுத்தார்.

மேலும் மிக்சர் என்ற பட்டத்தை அக்ஷயாவுக்கு தான் கொடுக்க வேண்டும், ஆனால் அவர் இப்போது இல்லை என்பதால் அந்த பட்டத்தை விக்ரம் சரவணனுக்கு கொடுக்கிறேன் என்று அனன்யா கூறியுள்ளார். அதேபோல் சொம்பு, பூமர், தேள் உட்பட சில பட்டங்களையும் அவர் சிலருக்கு வழங்கியுள்ளார்.

மொத்தத்தில் விஜய் வர்மா மற்றும் அனன்யாவின் வருகை பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.