தம்பி மரணம் குறித்து திடுக்கிடும் தகவலை தெரிவித்த நடிகர் ஆனந்த்ராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் கனகசபை என்பவர் நேற்று புதுவையில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இவர் புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் அந்த ஏலச் சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது சகோதரர் விஷமருந்தி தற்கொலை செய்யவில்லை என்றும் மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். சகோதரர் மரணம் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ் கூறியபோது ’தனது தம்பி கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை ஒரு சிலர் மிரட்டியதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் தனது தம்பி ஒரு வீடு வாங்கியதாகவும், அந்த வீடு சம்பந்தமாக சிலர் அவரை மிரட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட மனவேதனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் இவை அனைத்தும் அவர் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.
மேலும் தனது சகோதரரின் மரணம் குறித்து புதுவை காவல்துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தனது சகோதரர் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் ஆனந்தராஜ்அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments