close
Choose your channels

ஜி.வி.பிரகாஷுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி

Sunday, May 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளரான ஜிவி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய படங்களில் நடித்த நாயகியான 'கயல்' ஆனந்தி மீண்டும் மூன்றாவது முறையாக ஜி.வி.பிரகாஷூடன் இணையவுள்ளார்.

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தை அடுத்து பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கவுள்ள நிலையில் இரண்டாவது நாயகியாக 'கயல்' ஆனந்தியும் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நடிகை அவிகா கோர் அவர்களும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, 'கயல்' ஆனந்தி, அவிகாகோர், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பிராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment