மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாளில் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Thursday,March 24 2022]

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் புற்றுநோயால் மறைந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் அவருடைய மனைவி நெகிழ்ச்சியான பதிவு செய்துவிள்ளது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்த கண்ணன் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார் என்பதும் அதன் பின் அவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது தெரிந்ததே. மேலும் தான் கற்ற பாரம்பரிய கலைகளை மேடை நாடகங்கள் மற்றும் தெருக்கூத்து மூலமும் பரப்பி வந்தார் என்பதும் பலருக்கு அந்த கலைகளை கற்று கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் திடீரென குடல் புற்றுநோய் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த கண்ணன் மரணமடைந்தார். அவரது மறைவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆனந்த கண்ணன் பிறந்த நாள் வந்ததை அடுத்து அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’என்னுடைய அன்பான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.