ஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் ’எனிமி' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ’எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு அவரது மனைவி திவ்யாங்கா திடீரென விசிட் அடித்தார். ஆனந்த் சங்கர் மனைவியின் இந்த திடீர் விசிட்டை ஆனந்தசங்கர் மட்டுமின்றி படக்குழுவினர்களும் எதிர்பார்க்காததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆனந்த்ஷங்கர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உங்கள் வேலை லைட், கேமிரா ஆக்சன் என்று மட்டும் நீங்கள் நினைக்கலாம் .. ஆனால் மனைவி உள்ளே வரும்போது அவருக்கு குடையை சரியாகப் பிடிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது’என்று கூறியதோடு மனைவிக்கு குடைபிடிக்கும் ஒரு புகைப்படத்தையும் ஆனந்த் ஷங்கர் பதிவு செய்துள்ளார். க்யூட்டான இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியுள்ள ஆனந்த ஷங்கர், கடந்த 2019ஆம் ஆண்டு திவ்யாங்காவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
You may think you’re job is lights camera action.. but when the wife walks in, you better shift focus to holding the umbrella right.. ????@Me_Divyanka ☺️ pic.twitter.com/1YiL3aQ8ro
— Anand Shankar (@anandshank) December 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com