பிரபல தமிழ்ப்பட இயக்குனருக்கு ஜூலையில் திருமணம்

  • IndiaGlitz, [Saturday,June 15 2019]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' மற்றும் 'துப்பாக்கி' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி' திரைப்படத்தின் மூலம் இயக்குனரான கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் ஷங்கருக்கு வரும் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளது. மணமகள் திவ்யங்கா ஜீவானாந்தம். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் துபாயில் நடந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த ஷங்கர் தனது திருமணம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முதல் பதிவு என்றும், என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான இந்த தருணத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும், உங்கள் அனைவரின் ஆசியை வேண்டுகிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம்பிரபு நடித்த 'அரிமா நம்பி', விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்த 'இருமுகன்', விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் விரைவில் ஒருபுதிய படத்தை இயக்கவுள்ளார்
 

More News

ராஜராஜ சோழன் சர்ச்சை: ரஞ்சித்துக்கு சீமான் கண்டனம்

தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித் கடுமையான விமர்சனம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர்!

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலித்த பெண்ணை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் சங்க தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்த சீமான்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதவுள்ளன.

ரஜினி, கமல் பட வசனகர்த்தாவை தாக்கிய மளிகைக்கடைக்காரர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்', விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தாவும்

செல்போனில் இளம்பெண்ணிடம் தகாத பேச்சு: தமிழ் நடிகர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் ஒருவரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளில் பேசிய தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகர் வினாயகன் என்பவர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.