'கல்கி 2898 ஏடி' படத்திற்காக சென்னையில் செய்யப்பட்ட கார்.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்..!

  • IndiaGlitz, [Thursday,May 23 2024]

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

பிரபாஸ் முக்கிய இடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பதும் ’நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 'கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக கூறப்படுவதால் கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் பல டெக்னாலஜி அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்காக தங்கள் நிறுவனம் பிரத்யேகமாக ஒரு கார் செய்து கொடுத்துள்ளது என்று பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏடி’ படத்திற்காக எங்கள் நிறுவனத்தின் சென்னை கிளை ஒரு பிரத்யேக காரை செய்து கொடுத்துள்ளது, இதன் செயல்திறன், உள்ளமைப்பு ஆகியவை எதிர்கால வாகனத்திற்கான கற்பனை, எங்கள் நிறுவனம் இந்த காரை செய்வதற்கு கல்கி குழுவினர் உதவி செய்தனர், இந்த வாகனம் இரண்டு மகேந்திரா இ-மோட்டார்கள் பவர் மூலம் இயங்குகிறது, இந்த காருக்காக ஸ்பெஷல் வீல் மற்றும் டயர் தயாரிக்கப்பட்டது, எங்களது தயாரிப்பை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் ஒன்றிணைத்தது என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து இந்த படத்தில் இடம்பெறும் கார் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.