தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 33 ஆண்டுகால வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் நவ்தீப், சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பரிசு அறிவித்து இருக்கிறது.

பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் அறிமுக வீரர்களாக இந்த 6 பேரும் களம் இறங்கினர். மேலும் இவர்களின் விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் களத்தில் இவர்கள் காட்டிய அதிரடி பல மூத்த வீரர்களையும் மலைக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். இதனால் பலரும் அறிமுக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்திய தொழில் நிறுவனமான மஹேந்திரா கார் நிறுவனம் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் நவ்தீப், சைனி, சுப்மன் கில் ஆகிய 6 பேருக்கும் கார் பரிசினை அறிவித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அதன் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது

ஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்!

அமெரிக்காவின் 49 ஆவது துணை தலைவராக (அதிபராக) கமலா டி.ஹாரிஸ் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் நடிகை: குவியும் லைக்ஸ்கள்!

பிக் பாஸ் சீசன் 4 ஃபினாலே நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முந்தைய பிக்பாஸ் போட்டியாளர் ஷெரின் கலந்துகொண்டார் என்பதும்,

பேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா? அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலத்தின் வதோரோ நகரில் உள்ள ஒரு பேங்க் லாக்கரில் அதன் பயனாளி ஒருவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பத்திரமாக வைத்து உள்ளார்.

மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஃபினாலே நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது என்பது தெரிந்ததே