பக்கெட் லிஸ்டில் சேர்க்க வேண்டிய 10 அழகிய கிராமங்கள்… ஆன்ந்த் மகேந்திராவின் வைரல் பதிவு!
- IndiaGlitz, [Wednesday,June 14 2023]
இந்தியா என்றாலே பல வகையான கலாச்சாரங்களும் மொழிகளும் அடங்கியது என்றுதான் சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், இந்தியா முழுவதும் பரவி ஓடும் ஆறுகள், ரம்மிய மிக்க அழகிய இயற்கை காட்சிகள், பாலைவனம், பெரிய கடல் என்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் மனதிற்கு இதமளிக்க கூடிய ஏராளமான இடங்கள் இருக்கின்றன.
அதிலும் சில இடங்கள் எப்போதும் இயற்கையுடன் ஒன்றி பின்னி பிணைந்து இருப்பதைப் பார்த்திருப்போம். வெறும் கட்டிடம், மால் என்று நிரம்பி வழிந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் இதுபோன்ற கிராமங்கள் இன்னும் இயற்கையை தேக்கித்தான் வைத்திருக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவிலுள்ள 10 அழகிய கிராமங்களைப் பட்டியல் போட்டு காட்டியிருக்கிறார் பிரபல தொழிலதிபரான ஆன்ந்த் மஹேந்திரா. பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவ்வபோது நகைச்சுவை, திறமையான குழந்தைகள் குறித்து வீடியோக்களைப் பதிவிட்டு வரும் அவர் தற்போது 10 அழகிய கிராமங்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தின் கல்பா – சட்லஜ் நதி பள்ளத்தாக்கில் உள்ள கின்னௌரி பகுதியிலுள்ள ஒரு கிராமம்தான் கல்பா. இந்த கிராமத்தில் அழகான கோவில்களும் மடங்களுக்கும் இருக்கின்றன. கோவில், மடங்களுக்கு பெயர்பெற்ற இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஆப்பிள் தோட்டங்களும் நிரம்பி வழிகின்றன. அதோடு கம்பீரமான கின்னவுர் – கைலாஷ் மலைத் தொடரையும் அதன் இயற்கை எழிலையும் கண்டு களிக்க முடியும்.
மேகாலயா- மவ்லின்னாங் – இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருக்கும் இந்த கிராமம் ஆசியாவிலேயே மிக தூய்மையான கிராமம் என்று பெயர்பெற்றிருக்கிறது. இயற்கை வழிந்தோடும் இதன் அழகில் தூய்மையையும் நிசப்தத்தையும் உணர முடியும்
கேரளா – கொல்லங்கோடு – கேரளாவின் பாலக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லங்கோடு எனும் கிராமத்தில் அழகிய பசுமை தோட்டங்கள் நிறைந்திருக்கின்றன. இதமான வானிலை, எழில் கொஞ்சும் பசுமைக்காக இந்த கிராமம் போற்றப்படுகிறது.
தமிழ்நாடு – மாத்தூர் – கன்னியாக்குமரி மாவட்டத்திலுள்ள மாத்தூரில் குழந்தைகள் பூங்கா மற்றும் குளியல் இடங்களுக்குப் பெயர்போனது. அழகிய இயற்கை நிரம்பி இருக்கும் இந்தக் கிராமம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
கர்நாடகா – வாரங்கா – உடுப்பி மாவட்டத்திலுள்ள கார்கலாவில் இருந்து 26 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அழகிய கிராமம்தான் வாரங்கா. இயற்கை தன் ஒட்டுமொத்த அழகையும் நிரப்பி இருக்கும் இந்த இடம் ஓய்வெடுப்பதற்கு சிறந்தது.
மேற்கு வங்காளம் – கோர்கே – இமயமலையில் அதிசய இயற்கையை ரசிக்க வேண்டுமா? கோர்கேவிற்கு வந்தால் அது நிச்சயம் நடக்கும். காரணம் டார்ஜிலிங் – சிக்கிமிற்கு இடையே அமைந்துள்ள கோர்கே கிராமமானது ஒரு பள்ளத்தாக்கு பகுதியாக இருக்கிறது. இதனால் இமயமலையின் இயற்கை எழிலை முழுமையாக கண்டுகளிக்க முடியும்.
ஒரிசா – ஜிராங் – சந்திரகிரி என்று அழைக்கப்படுகிற ஜிராங் ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன கிராமம்தான். ஆனால் திபெத்திய மக்கள் இங்கு அதிகம் வாழ்ந்து வருகின்றனர். நகரத்து வாசனையே இல்லாமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் இந்த கிராமம் அழகிய மலைகளை கொண்டது. மேலும் பத்மசாம்பவ மகாவிஹார மடாலயம் இப்பகுதியில் அமைந்திருக்கிறது.
அருணாச்சலப்பிரதேசம் – ஜிரோ- பழங்குடியின மக்கள் வாழும் தனித்துவமான கிராமம்தான் ஜிரோ. குளிர்ச்சிப் பொருந்திய வானிலை, இயற்கை எழில் என்று நிம்மதியை தேடும் பலருக்கும் இது புகழிடமாக இருக்கும்.
உத்தரகாண்ட்- மானா- திபெத் மற்றும் சீன எல்லையில் உள்ள கடைசி இந்திய கிராமம்தான் இந்த மானா. சாமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. பனி சிகரங்கள், புல்வெளிகள், பனி உருக்கிய நிரோடைகள் என்று பார்ப்பதற்கே பரவசத்தை ஏற்படுத்தும் இந்த கிராமம் பார்க்க வேண்டிய ஒன்று.
ராஜஸ்தான் – கிம்சர் – திருவிழாவிற்கு பெயர் பெற்ற இந்த சிறிய கிராமம் இயற்கை அழகு நிரம்பியது.
This beauty around us just left me speechless…My bucket list for travel in India now overflows…. https://t.co/WXunxChIKg
— anand mahindra (@anandmahindra) June 8, 2023