செல்போன் இந்த அளவுக்கு உபயோகமானதா? ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஆச்சரிய வீடியோ
- IndiaGlitz, [Saturday,December 28 2019]
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக செல்போனை அனைவரும் கூறி வருகின்றனர். ஒரு வீட்டில் உள்ள முக்கிய பொருள்களான டிவி, ரேடியோ, கம்ப்யூட்டர், கால்குலேட்டர், கேமிரா, உள்பட பல பொருட்களையும் ஒரே ஒரு செல்போனில் அடங்கியுள்ளது என்பது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம் தான். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளவும், நொடிப்பொழுதில் தகவல் பரிமாற்றம் செய்யவும் உதவும் இந்த செல்போன் மிக வேகமாக பரவிய சாதனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் செல்போனால் மிகப்பெரிய நன்மை இருந்தாலும் சில தொந்தரவுகள் செல்போனால் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுவதும் உண்டு.
இந்த நிலையில் அவ்வப்போது பரபரப்பான வீடியோவை வெளியிட்டு வரும் ஆனந்த் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தற்போது ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி செல்போன் மூலம் வீடியோ கால் போட்டு செய்கை மூலம் தகவல் தருகிறார். வாய் பேச முடியாதவர்கள் தகவல் தொடர்பு தகவல் தொடர்பு ஈடுபட கஷ்டப்படும் நிலையில் இந்த கண்டுபிடிப்பானது எந்த அளவுக்கு அவர்களுக்கு மிக எளிதில் தகவல் தொடர்பை பரிமாற்றம் செய்ய உதவுகிறது என்பதை அவர் அந்த வீடியோ மூலம் குறிப்பிட்டுள்ளார்
இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதோடு செல்போனால் இவ்வளவு பெரிய நன்மைகளும் உண்டா? மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அளவுக்கு உதவுகிறதா? என்ற ஆச்சரியத்தை பலர் பதிவு செய்து வருகின்றனர்
We often criticise the way in which mobile devices have taken over our world.. It’s good to remind ourselves that these devices have also OPENED up a whole new world of communication for many of us... pic.twitter.com/kricI2dNeG
— anand mahindra (@anandmahindra) December 27, 2019