முன்னணி தொழில் அதிபரின் அசால்ட் சேலஞ்சால்… வைரலாகும் அக்சர் படேல் சன் கிளாஸ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக இருந்து வரும் மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா வித்தியாசமான ஒரு சேலஞ்சை நெட்டிசன்களிடம் விடுத்து இருந்தார். தற்போது அந்த சேலஞ்சையும் நிறைவேற்றி ஒரு தொழில் அதிபருக்குள் இப்படியொரு ரசனையா? என கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்து இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டி மற்றும் டி20 போட்டி இரண்டிலும் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அதிரடி காட்டி இருந்தனர். இதனால் டெஸ்ட் தொடரில் 3-1 என்ற முன்னிலையும் டி20 தொடரில் 3-2 என்ற முன்னிலையும் பெற முடிந்தது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் போட்டியில் இடம்பெற்று தனது அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்த ஸ்பின் பந்து வீச்சாளர் அக்சர் படேலை ஆன்ந்த் மஹேந்திரா புகழ்ந்து தள்ளி இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய அக்சர் படேல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை ஏற்படுத்தினார். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அக்சர் படேலின் புகைப்படத்தை ஆனந்த் மஹேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இவர் அணிந்து இருக்கும் சன் கிளாஸ் எங்கு கிடைக்கும்? என்ன பிராண்ட்? அக்சருக்காக நான் இதை வாங்குவேன் எனத் தெரிவித்து இருந்தார்.
ஆனந்த் மஹேந்திராவின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் சன் கிளாஸ் குறித்த விவரங்களை பதிவிட்டு இருந்தனர். மேலும் இதற்கு பதில் அளித்த ஆனந்த் மஹேந்திரா தான் ஒரு செட் சன் கிளாஸை வாங்கி இருப்பதாக டிவிட்டரில் புகைப்படத்தைப் பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த சன் கிளாஸை அணிந்து புகைப்படம் வெளியிடுமாறு ஆனந்த் மஹேந்திராவிடம் கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஆனந்த் மஹேந்திரா இது ஒரு வெற்றியின் அடையாம். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இந்த வெற்றித் தொடரும் என நினைக்கிறேன். அதனால் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதும் இந்த கிளாஸை அணிந்து புகைப்படம் வெளியிடுகிறேன் எனக் கூறியிருந்தார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி வெற்றிப்பெற்றதை அடுத்து ஆனந்த் மகேந்திரா, அக்சருக்காக வாங்கிய சன் கிளாஸை அணிந்து அந்தப் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் மிகப் பெரிய தொழில் அதிபரான ஆனந்த் மஹேந்திராவுடன் நெட்டிசனகள் நடத்திய இந்த விவாதம் மற்றும் சேலஞ்ச் உரையாடல் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
OK, have to fulfill a commitment. Here’s the promised selfie with my “Axar” shades...My new good luck charm that’s proven its worth...?? pic.twitter.com/VdLSMCNkrs
— anand mahindra (@anandmahindra) March 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments