10 வயது சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ஆனந்த் மஹிந்திரா… நெகிழ்ச்சி காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் கோபால் மஹிந்திரா. இவருடைய நிறுவனம் இந்தியாவில் செய்யாத தொழிலே இல்லை எனும் அளவிற்கு பல்வேறு துறைகளில் கிளைப்பரப்பி இருக்கிறது. இப்படி பில்லியனர்கள் வரிசையில் கொடிக்கட்டிப் பறந்துவரும் ஆனந்த் மஹிந்திரா சோஷியல் மீடியாவில் ஒரு 10 வயது சிறுவனிடம் 1,000 மன்னிப்புகள் கேட்டுக்கொள்கிறேன் என்று நெகிழ்ச்சிப் பொங்க பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஆனந்த் மஹிந்திராவின் மாண்பை புகழ்ந்து வருகின்றனர்.
ஆனந்த் மஹிந்திரா பொதுவாகவே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய கிரிக்கெட் அணி அவர்களுடைய சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டு திரும்பினர். இதைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா அனைத்து புது வீரர்களுக்கும் “மஹிந்திரா தார்” வாகனத்தை பரிசாக வழங்கி இருந்தார்.
அதேபோல ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு வரும் பல வீரர்களுக்கு ஆனந்த் மஹிந்திரா பரிசுகளை வாரி வழங்குவது வழக்கம். அதோடு சிறுவர், சிறுமிகள் இதுபோன்ற விளையாட்டில் சிறந்து விளங்கும் வீடியோக்களைப் பார்த்தால் அதை உடனே தன்னுடைய டிவிட்டரில் பதிவிடும் பழக்கத்தை இவர் வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் இருந்து களரிப்பயிற்சி பெற்றுவந்த 10 வயது சிறுவன் ஒருவரின் வீடியோவை பதிவிட்ட ஆனந்த் அவர்கள், பாலினத்தை மாற்றி “யாருப்பா இந்த பொண்ணு அவளோட வழியில யாரும் சென்றுவிடாதீர்கள்.. வாழ்த்துகள்“ என்று பதிவிட்டு இருந்தார். இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கேரள சிறுவன் நீலகண்ட நாயர் “சார் உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம். நான் ஒரு பொண்ணு அல்ல. ஒரு சிறுவன்“. களரி பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்காக எனது முடியை வளர்த்து வருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா உடனே அவருக்கு பதிலளித்து என்னுடைய தவறுக்கு 1,000 மன்னிப்புகள் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் உங்களுடைய திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. பாராட்டுகள் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்வுகளை பார்த்த நெட்டிசன்கள் சிறுவன் நீலகண்டனை வாழ்த்தி வருவதோடு ஆனந்த் மஹிந்திராவின் பெருந்தன்மையையும் புகழ்ந்து வருகின்றனர்.
WARNING: Do NOT get in this young woman’s way! And Kalaripayattu needs to be given a significantly greater share of the limelight in our sporting priorities. This can—and will— catch the world’s attention. pic.twitter.com/OJmJqxKhdN
— anand mahindra (@anandmahindra) August 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments