close
Choose your channels

தமிழில் ரீமேக் ஆகும் ஆனந்த் தேவரகொண்டாவின் 'பேபி'.. ஹீரோ யார்?

Sunday, October 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நடித்த திரைப்படம் ’பேபி’. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.90 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய லாபத்தை அள்ளி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் ரெட்டி ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் அவரது சகோதரர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ’பேபி’ திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது

இந்த நிலையில் ’பேபி’ படம் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் தற்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

’பேபி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் இளம் நடிகர் ஒருவர் நடிப்பார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment