'நாகேஷ் திரையரங்கம்' படத்திற்கு தடை கேட்டு ஆனந்தபாபு வழக்கு
- IndiaGlitz, [Friday,June 30 2017]
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு, 'நாகேஷ் திரையரங்கம்' படத்தின் டைட்டிலுக்கு தன்னிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும் அதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஆனந்த்பாபு தனது மனுவில் 'தன்னுடைய தந்தையும் நகைச்சுவை நடிகருமான நாகேஷ், சென்னை தி.நகரில் அவருடைய பெயரில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், தற்போது 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்து வருபவர்கள் தன்னிடம் அந்த டைட்டிலுக்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'நாகேஷ் திரையரங்கம்' படத்தில் ஆரி, ஆஸ்னா ஜாவேரி, லதா, சித்தாரா, மனோபாலா, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.