மீண்டும் தளபதியுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் இணைந்தார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு தற்போது ஸ்டண்ட் இயக்குனராக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி', பைரவா' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய் படங்களில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை அமைத்த அனல் அரசு இந்த படத்திலும் அனல் தெறிக்கும் வகையில் ஸ்டண்ட் காட்சிகளை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா?

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அதிகாரபூர்வமாக தங்கள் கட்சியின் பெயரை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு அரசியல் களத்தில் நேரடியாக குதிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

காலையில் தொடங்கி மாலையில் முடியும் கதை தான் சவரக்கத்தி: ஜி.ஆர்.ஆதித்யா

மிஷ்கின், ராம், பூர்ண நடிப்பில் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி' திரைப்பம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

தளரா மனம் கொண்ட தமிழன் வெற்றி பெற்ற நாள்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.