கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் யார்? போலீசார் விசாரணை

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருடைய வீடு உள்ள பகுதியான ஆழ்வார்ப்பேட்டை பிசியாக இருந்து வருகிறது. அவருடைய கட்சியில் சேர வரும் தொண்டர்கள் மற்றும் கட்சியினர் எந்நேரமும் அவரது வீட்டின் முன் கூடியிருப்பது வழக்கம்

இந்த நிலையில் மர்ம வாலிபர் ஒருவர் திடீரென கமல்ஹாசன் வீட்டின் சுவரேறி குதிக்க முயன்றதாகவும், அந்த நபரை கமல் வீட்டின் பாதுகாவலர் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிடிபட்ட வாலிபர் திட்டக்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் சபரிநாதன் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசனின் வீட்டில் திருட நுழைந்தாரா? அல்லது கமல்ஹாசனை சந்திக்க வந்த அவருடைய தீவிர ரசிகர்களில் ஒருவரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து கமல் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது