உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சர்ட்: என்ன ஆச்சு தமிழ் சினிமா டைட்டிலுக்கு
- IndiaGlitz, [Saturday,March 09 2019]
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தமிழ் சினிமாவின் டைட்டில்களே கவிதை போன்று இருக்கும். ஆலயமணி, அமரகாவியம், பாலும் பழமும், தேனும் பாலும், காவியத்தாய், இதயக்கனி, சங்கே முழங்கு போன்ற தலைப்புகளே அந்த படங்களின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.
அதன்பின்னர் கமல், ரஜினி காலத்தில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், பாயும் புலி, நாயகன் என ஹீரோக்களை புகழும் வகையில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஜித், விஜய் படங்களுக்கு கிட்டத்தட்ட ஹீரோவின் கேரக்டர்களின் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் ஒருசில டைட்டில்கள் நீளமாகவும், இரட்டை அர்த்தம் கொண்டவையாகவும் உள்ளது. 'உங்கள போடணும் சார்' 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற டைட்டில்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தற்போது ஒரு படத்திற்கு 'உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சர்ட்' என்று ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அர்த்தமில்லாத, படத்திற்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் வைக்கப்படும் டைட்டில்களால் ரசிகர்களை கவர்ந்து விட முடியுமா? என்பதை திரையுலகினர் யோசிக்க வேண்டும். தமிழ் சினிமா மீண்டும் கவுதம் மேனன் படத்தலைப்புகள் போல் கவிதைத்தனமாக மாற வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.