ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண பயணம்: தியாகராஜனின் வாழ்க்கை வரலாறு
- IndiaGlitz, [Thursday,April 25 2024]
பிரபல நடிகர் தியாகராஜன்'IndiaGlitz'-க்கு அளித்த பேட்டியில் நான் இளம் வயதில் தந்தையை இழந்த பிறகு குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து ஒரு பிஸ்னஸ் மேன் ஆனேன். அதன் பிறகு பட விநியோகத்திலும் ஈடுபட்டேன், இந்த படம் விநியோகத்துல நான் ராஜா சார் இயக்குனர் பாரதிராஜா அனைவரும் சேர்ந்து செய்யலாம் என்று பூட்டாத பூட்டுகள் படத்தை வாங்கி விநியோகம் செய்ய முடிவு செய்தோம். இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று பாரதிராஜா ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தை தயாரித்தேன், இந்த படத்திற்கு கதாநாயகன் தேடி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இயக்குனர் பாரதிராஜாவை அழைத்து செல்வேன். கடைசியில் டான்போஸ்கோ பள்ளியில் ஒரு மாணவனை செலக்ட் செய்தோம்.
ஒரு நாள் இளையராஜா அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார், போகும் போது எனது அண்ணன் ஆர்டி பாஸ்கர் மருதாணி என்றொரு படம் எடுத்திருக்கிறார், அந்த சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கிறார். அதனால் அலைகள் ஓய்வதில்லை படத்தை அவருக்கு கொடுத்து விடலாம் என்று கேட்கிறார். அதற்கு நான் சம்மதிக்க அந்த படம் இளையராஜாவின் அண்ணன் தயாரிப்பில் வெளிவந்தது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க முடிவு செய்த போது எனது மனைவி நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிறகு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் என் மனைவியை சமாதானப்படுத்தி என்னை படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு மம்பட்டியான், காவல் என நிறைய படம் பண்ணினேன்.
இதைவிட இன்னும் சுவாரஸ்யம் கருடா சௌக்கியமா என்ற படத்தில் சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் பயமாக இருந்தது. ஒருநாள் சிவாஜி அவர்கள் என்னை சத்யா ஸ்டுடியோவிற்கு வரவழைத்து என்ன நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டீங்களாமே என்று கேட்டார். இல்ல சார் உங்களுடன் நடிக்க எனக்கு பயமாய் இருக்கிறது என்று சொன்னேன். இல்லை நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார். கழுத்து நிறைய நகைகளை அணிந்து கொண்டு செல்வேன், அதை பார்த்து சிவாஜி அவர்கள் என்னை பார்த்து வா நகைக்கடை என்று சொல்லுவார், அவர் சொன்னது பலித்தது போலவே இன்று நான் ஒரு நகைக்கடையை வைத்திருக்கிறேன்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇