கழுகை பிடித்து நீருக்குள் இழுத்த ஆக்டோபஸ்..! வீடியோ.
- IndiaGlitz, [Friday,December 13 2019]
கனடா வான்கோவர் தீவில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் ஒரு வித்தியாசமான சம்பவத்தைப் படம் பிடித்துள்ளனர்.
வான்கோவர் தீவின் வட மேற்கு பகுதியில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மீனவர்கள் பறவையின் அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளனர். எங்கே சத்தம் வருகிறது என்று பார்த்த போது அவர்கள் பார்த்தது அதிசயமானதாகவும் விசித்திரமானதாகவும் இருந்துள்ளது.
ஆக்டோபஸ் ஒன்று, ஒரு முழு உயிருள்ள கழுகைப் பிடித்து தண்ணீயிருக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. கழுகு பறக்க முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக இதை பார்த்த மீனவர்கள் ஆக்டொபஸிடமிருந்து கழுகை மீட்டனர். தண்ணீர் குடிப்பதற்காகவோ இல்லை பறக்க முடியாமல் சோர்ந்தோ கழுகு தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என மீனவர்கள் கூறினர்.
அமெரிக்காவில் வெண்கழுத்து கழுகை துன்புறுத்தினாலோ, வேட்டையாடினாலோ வெண்கழுத்து மற்றும் தங்க கழுகு பாதுகாப்பு சட்டத்தின் படி 2,50,000 டாலர் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆனால் இது ஆக்டொபஸுக்கு தெரியாதே..!