சர்வதேச ஃபிட்னஸ் பயிற்சியாளரால் மீண்டும் டிரெண்ட் ஆகும் 'நான் ரெடிதான்' பாடல்.. வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Friday,March 22 2024]
சர்வதேச ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் தனது மாணவ மாணவிகளுடன் விஜய் நடித்த ’லியோ’ படத்தில் இடம் பெற்ற ’நான் ரெடி தான் வரவா’ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க்அவுட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நான் ரெடி தான் வரவா’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை விஜய் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் யூடிபில் 200 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த பாடல் திடீரென மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதற்கு காரணம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஜூலியஸ் என்பவர் தனது மாணவ மாணவிகளுடன் 'நான் ரெடி தான்’ பாடலுக்கு நடனமாடிக்கொண்டே ஒர்க்கவுட் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததுதான்.
இந்த பாடல் குறித்து பெருமையாக அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இவர் தனது இன்ஸ்டாவில் தமிழ் மற்றும் தெலுங்கு ஹிட் பாடல்களுக்கு வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.