என் வாழ்வில் இன்று முக்கிய நாள்: ஜிவி பிரகாஷ் பெருமிதம்

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் 'நாச்சியார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது என்பது தெரிந்தது. இந்த டீசரில் ஜிவி பிரகாஷின் கடுமையான உழைப்பும், பாலாவின் பாணியும் இருந்ததை அனைவரும் கவனித்திருப்பார்கள்.  இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.                 

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இசைஞானி இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பிரியங்கா இந்த பாடலை பாடினர். இசைஞானி இசையில் ஜிவி பிரகாஷ் பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தகக்து.

இதுகுறித்து ஜிவிபிரகாஷ் தனது சமூகவலைத்தளத்தில் கூறியதாவது: என்னுடைய வாழ்க்கையில் இன்று ஒரு முக்கியமான நாள். மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் 'நாச்சியார்' படத்திற்காக இன்று நான் ஒரு அருமையான டூயட் பாடலை பாடினேன்.

உங்கையும் எங்கையும் சேர்த்து
கைரேகை மாத்துது காத்து

என்ற வரிகளில் இந்த பாடல் தொடங்குகிறது என்று ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.  

More News

தளபதி விஜய் இடத்தில் தனுஷ்! மிக விரைவில் ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் வெற்றி குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வசூலிலும், வரவேற்பிலும் சாதனை படத்தை இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது.

ஜெய் நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜெய், அஞ்சலி நடித்த பலூன்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் ஜெய் தற்போது நடிகர் நிதின்சத்யா தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ்-ரைசா படத்தின் டைட்டில் அறிவிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிடைத்து சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகின்றனர்.

சுந்தர் சியின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா

சுந்தர் சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'மீசையை முறுக்கு' படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்து, இசையமைத்து இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே.

கட்சி தொடங்க பணம்: கமல்ஹாசனின் அதிரடி உத்தரவு

உலகநாயகன் கமல்ஹாசன் கட்சி தொடங்குவது உறுதி என்ற நிலையில் தனது கட்சிக்கு பொதுமக்களே நிதி தருவார்கள் என்றும் முதல்கட்டமாக ரூ.30 கோடி நிதி வசூலிக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.