இன்று நள்ளிரவில் 'வேதாளம்' டீசர் - மதன்கார்க்கி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த தகவலை பிரபல பாடலாசிரியர் மதன்கார்க்கி இன்று தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டீசரை பார்த்து அசந்து போனதாகவும், சிறுத்தை சிவா மற்றும் அவரது குழுவினர்களால் 'வேதாளம்' டீசர் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு இந்த டீசர் வெளியாகவுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளிவந்தது முதல் அஜீத் ரசிகர்கள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ள டீசரை வரவேற்க தயாராகிவிட்டனர். இன்றைய டீசரில் அஜீத்தின் மூன்று கெட்டப்புகளும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் உள்பட 'புலி' படக்குழுவினர் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை

இளையதலைமுறை விஜய் நடித்த 'புலி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் விஜய், இயக்குனர் சிம்புதேவன், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.....

'புலி' படக்குழுவினர் கூறிய புதிய ரகசியங்கள்

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடித்த 'புலி' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இதுவரை வெளியான 'புலி' படத்தின் தகவல்களை கொஞ்சம் வரிசைப்படுத்தி பார்ப்போம்....

'புலி' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு

தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தான் இயக்கிய 'தாகபூமி' என்ற குறும்படத்தின் கதையை தழுவி 'கத்தி' படம் உருவாக்கப்பட்டதாகவும்...

தூங்காவனம்: கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் கேரக்டர்கள் குறித்த தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது...

'வேதாளம்' டைட்டில் குறித்த சுவாரஸ்யமான தகவல்

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது...