'தல 57' படத்தின் முக்கிய மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,January 14 2017]

தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிந்துவிடும் என்று ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் முடிவடைந்துள்ள பல்கேரிய படப்பிடிப்பு காட்சிகளின் பேட்ச்வொர்க் தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த படம் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் டைப்பில் உள்ளது என்று கூறியதில் இருந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார்.