'இறைவன்' படத்தை அடுத்து இன்னொரு ஜெயம் ரவி படம்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

ஜெயம் ரவி நடித்த 'இறைவன்’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவான 'இறைவன்’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்த இன்னொரு திரைப்படமான ’சைரன்’ திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த படத்தின் முக்கிய தகவல் வரும் 10ஆம் தேதி அதாவது நாளை அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து அது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அனேகமாக நாளை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அல்லது வேறு முக்கிய குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

அடுத்தடுத்து ஜெயம் ரவி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

சண்டையும் ரெண்டு..சந்தோஷமும் ரெண்டு.. பிக்பாஸ் தமிழ் தொடங்கும் தேதி இதுவா?

விஜய் டிவியில்  பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

முதல் நாளில் உலக சாதனை செய்த 'ஜவான்' வசூல்.. திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பனிங்..!

ஷாருக்கானின் 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!

'டங்கமாரி' ஸ்டைலில் ஒரு தர லோக்கல் குத்துப்பாட்டு.. தனுஷ் அடுத்த படத்தில் சம்பவம் செய்யும் ஏஆர் ரஹ்மான்..!

தனுஷின் அடுத்த திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் 'டங்கமாரி' பாடல் போன்ற ஒரு தர லோக்கல் குத்து பாட்டு இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாமதமாகும் 'இந்தியன் 2' ரிலீஸ்.. முந்துகிறது ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

'தளபதி 68' பூஜை, படப்பிடிப்பு எப்போது? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன 'தளபதி 68' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை