சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,March 18 2019]

'மிஸ்டர் லோக்கல்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்

இந்த நிலையில் 'கனா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ரியோராஜ், கலையரசன், விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுளது. அநேகமாக இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.