பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து அவர் தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீசாக இருக்கும் நிலையில் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த 19 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பா ரஞ்சித் ஹிந்தியில் இயக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் திரைக்கதைக்காக கடந்த பல மாதங்களாக ஆய்வு செய்து வரும் பா ரஞ்சித் பல அற்புத தகவல்களை திரட்டி வைத்துள்ளார் என்றும் தற்போது இந்த படத்தை தொடங்குவதற்கு அவர் தயாராகி விட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா குறித்த அரிய குறிப்புகளை ஆய்வு செய்து பா ரஞ்சித் வைத்திருப்பதாகவும் இந்த படம் இந்திய அளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
'KABALI', 'KAALA', 'SARPATTA PARAMBARAI' DIRECTOR PA RANJITH FORAYS INTO HINDI FILMS... #PaRanjith - director of #Tamil films #Kabali, #Kaala and #SarpattaParambarai - debuts in #Hindi films... Will direct #Birsa... Produced by #ShareenMantri and #KishorArora [of #NamahPictures]. pic.twitter.com/4YEEkvAPyG
— taran adarsh (@taran_adarsh) February 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com