'துணிவு' டிரைலர் எப்போது? செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இந்த நிலையில் சற்று முன் படக்குழுவினர் வெளியிட அதிகாரபூர்வ அறிவிப்பில் நாளை ’துணிவு’ படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனேகமாக ’துணிவு’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி டிசம்பர் 31ஆம் தேதி ’துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும் இந்த அறிவிப்பு தான் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது.