இன்று காலை 10 மணிக்கு 'மெர்சல்' திருப்பம் ஏற்படுமா?

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

தளபதி விஜய் நடித்த இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு ஒருசில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. 

இந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் இன்னும் இந்த படத்திற்கான தடையில்லா சான்றிதழ் அளிக்காததால் தயாரிப்பாளருக்கு சென்சார் சர்டிபிகேட் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டுமே கூடும் விலங்குகள் நல வாரியத்தின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு 'மெர்சல்' படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுக்க கூடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால் 'மெர்சல்' திரைப்படம் மெர்சலாக உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

More News

சென்னை காசி தியேட்டரின் முடிவால் விஜய் ரசிகர்கள் சோகம்

சென்னை காசி தியேட்டர் என்பது ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விரும்பத்தக்க திரையரங்கம். புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த தியேட்டர் உள்ள சாலையே கலகலப்பாக இருக்கும்

அறம் படத்திற்காக நயன்தாராவுக்கு சல்யூட் அடித்த பிரபல இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள 'அறம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும்

முதல்வர் - விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?

தளபதி விஜய் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் திடீர் சந்திப்பு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் இந்த படத்திற்கான பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்தபாடில்லை.

மீண்டும் காக்கி சட்டை அணிகிறாரா அஜித்?

அஜித் நடித்த சர்வதேச உளவாளி படமான 'விவேகம்' 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'அஜித் 58' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.